Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தசரா விழாவில் ஆபாச நடனத்தை  தடை செய்ய வழக்கு 

திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், 'குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் பத்துநாள் தசரா விழா மிகவும் புகழ்பெற்றது. சூரசம்ஹார விழா  நடைபெறும் பத்தாவது நாளில் பல்வேறு வேடங்கள் அணிந்து வருபவர்கள், குழுக்களாக சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இதுவரை நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மட்டும் நடந்து வந்தநிலையில் தற்போது  தமிழ், இந்தி சினிமா, டிவி துணை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

தசரா

கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை மதுபானக்கூடங்களில் நடனமாடும் பெண்களை அழைத்து வருகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் அழைத்து வரப்படும் இவர்கள் பொது இடங்களில் ஆபாச நடனம் ஆடுவதுடன், அசிங்கமாகவும் நடந்து கொள்கின்றனர். இதனால், பக்தர்கள் வேதனைப்படுகிறார்கள். இந்தாண்டு தசராவிழா செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது. அதில் பணத்துக்காக மதுக்கூடத்தில் ஆடும் அழகிகள், ஆபாசமாக ஆடும் டிவி, சினிமா நடிகர் நடிகைகள்  ஆடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள்,  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்.பி பதிலளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை 31-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement