அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய சிவகங்கை கலெக்டர்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக லதா ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

பதவியேற்றதை அடுத்து, மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஒவ்வொரு துறையில் உள்ள உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல் உத்தரவு பிறப்பித்தார். அதோடு முதல் நாளான திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார். மதியம் வரைக்கும் 273 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான மனுக்களை கலெக்டரே வாங்கி நேரடி பார்வைக்கு வைத்துக்கொண்டார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் வரப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத, பதில் அனுப்பாத அதிகாரிகளிடம் கண்டிப்பு காட்டினார்.

தேவகோட்டை நகராட்சியில் இருந்து மீட்டிங்கிற்கு லைன்மேன் வந்திருந்தார். அவருக்கு சி.எம்.செல் பெட்டிஷன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. இதையடுத்து, உடனே மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் கலெக்டர். 'உங்க கமிஷனரிடம் போய் சொல்லுங்க. இனிமேல் அவர்தான் வரணும்னு கலெக்டர் சொன்னாங்கனு சொல்லுங்க' என்றார். இந்தப் பதில் இவருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான துறை அதிகாரிகள் சி.எம் செல் பெட்டிஷன் மீது நடவடிக்கை எடுக்காமல் மாதக்கணக்கில் இருப்பதையும் கண்டுபிடித்து அந்த அதிகாரிகளுக்கு ரெய்டு விட்டார். மக்கள் குறைதீர்க்கும் நாளுக்கு ஒரு சில அதிகாரிகள் 'பிக்னிக்' போவது போல் வருகிறார்கள். மற்ற அதிகாரிகள் தங்களுக்கு கீழ் நிலை அதிகாரிகளை அனுப்பி வைக்கிறார்கள். இதையறிந்த கலெக்டர் லதா, 'இந்நிலை மாற வேண்டும். இனிமேல் மீட்டிங் வரும் அதிகாரிகள் அவரவரின் துறைகள் சார்பான அனைத்து மனுக்களையும் பற்றி கண்டிப்பாக  தெரிந்திருக்க வேண்டும். சி.எம் செல் பெட்டிஷன் மீது எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த வேண்டாம்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!