Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற மாணவனுக்கு பதக்கங்களை வழங்கிய முதல்வர்..!

தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழக்கி கௌரவித்தார். 


 மதுரை கே.புதூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ரைபில் கிளப்பில், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிற்சிபெற்றுவருகிறார்.  இந்திய அளவில்  நான்கு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். தெற்கு மண்டலமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா உட்பட புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற, ஒன்பதாவது தென்னிந்திய அளவிலான தென்மண்டல ஷூட்டிங் சாம்பியன்ஷிப்  போட்டி ஆகஸ்ட் 21 முதல் 26 வரை சென்னை ஆவடியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மாணவன் விஜயதர்ஷன், 10 மீட்டர் பீப்சைட் ஏர் ரைபிள் போட்டி ஜூனியர் பிரிவில் ஒரு வெள்ளிப்பதக்கமும், ஆண்களுக்கான ஐ.எஸ்.எஸ்.எப் மற்றும் என்.ஆர் பிரிவில் நான்கு வெண்கலப்பதக்கங்களும் வென்றுள்ளார். இந்நிலையில், வரும் டிசம்பரில் நடக்கும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். மேலும், கடந்த ஜீலை மாதம் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், குழுப் பிரிவில் 4 தங்கப் பதக்கங்களும்,1 வெங்கலப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் செயல்படும் ரைபிள் கிளப், தனியாருக்கு சொந்தமானது. குண்டுகள் துளைக்கும் போர்டுகள் எலெக்ட்ரானிக்கில் இருக்க வேண்டும் என்றும், மாவட்டம் வாரியாக அரசாங்கமே ரைபிள் கிளப்பை நவீன அளவில் நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். தமிழகத்திற்குப் பெருமைசேர்த்த மாணவன் விஜயதர்ஷனுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி பதக்கங்களை வழங்கி கெளரவப்படுத்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement