Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டண உயர்வால் டெல்லி மெட்ரோவில் குறைந்தது கூட்டம்

டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம், கடந்த மே மாதம் முதல் உயர்த்தப்பட்டது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக 30 ரூபாய் கட்டணம் என்பது 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 7,89,98,059 பயணிகள் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். மே மாதம் 8,13,52,987 பேரும், ஜூன் மாதம் 8,16,32,752 பேரும் பயணித்தனர்.

டெல்லி மெட்ரோ ரயில்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 8,25,02,431 பயணிகள் பயணித்தனர். இந்த ஆண்டு மே மாதம் மட்டும் 8,21,52,987 பேரும், ஜூன் மாதம் 7,71,51,919 பேரும் பயணித்தனர். திடீரென்று மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மெட்ரோவில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களுக்கு 10சதவிகிதக் கட்டணம் தள்ளுபடிசெய்யப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement