வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (29/08/2017)

கடைசி தொடர்பு:12:45 (29/08/2017)

கிட்னி பிரச்னைக்குத் தகுதியான பணியாளர்களை நியமிக்க உத்தரவு !

 

 

hc

விருதுநகர் மாவட்டம், முக்குளம், தொட்டியபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில், கிட்னி பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கிட்னி பிரச்னைக்காக ஊரை காலிசெய்துவருகிறோம் என்ற தகவல் பலரையும் அதிரவைத்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஆனந்தராஜ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அந்த மனுவில்...

'தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில், சிறுநீரகவியல் சிறப்பு டாக்டர்கள் இல்லை. அதே நேரத்தில், மதுரை உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சிறுநீரகவியல் துறையில் ஹீமோ டயாலிஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், போதுமான தகுதியான டயாலிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்படாததாலும், போதிய இயந்திரங்கள் இல்லாததாலும் சிறுநீரக நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். வெகு நேரம் காத்திருப்பதாலும், போதிய டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததாலும் சிறுநீரக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை நிலவுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளில், தகுதியான சான்றிதழ்பெற்ற டயாலிசிஸ் தொழில்நட்பப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என   மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, ஏழை நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, அரசு  மாவட்ட  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில்  தகுதியானசான்றிதழ் பெற்ற டயாலிசிஸ் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசின்  சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.