’திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!’ - மயில்வாகனன் ரிட்டர்ன்ஸ்

திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையராக இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரைக்குப் பணியிட மாற்றம்செய்யப்பட்ட டி.சி மயில்வாகனன், மீண்டும் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டி.சி. மயில்வாகனன்

நேற்று இரவு, தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் 10 அதிகாரிகளைப் பணியிட மாற்றம்செய்தும், அவர்களில் மூன்று பேருக்குப் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் அளித்தும் உத்தரவிட்டார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையராகப் பணியாற்றிய மயில் வாகனனும் ஒருவர்.

திருச்சியில் பணியாற்றிவந்த டி.சி.மயில்வாகனன், கடந்த சிலவாரங்களுக்கு முன்பு மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராக மாற்றம்செய்யப்பட்டார். அவரது குடும்பம் தற்போது திருச்சிக்குக் குடிபெயர்ந்துள்ள நிலையில், அவர் மதுரையில் பணிமாறுதல் பெற்றது அவருக்குச் சிக்கலாக இருந்தது. அதனால், அவர் திருச்சிக்கு வந்துவிட தொடர்ந்து முயற்சிசெய்தார். மேலும், திருச்சி மாநகரக் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் பதவியில் இருந்த செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்டக் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், காலியாக இருந்த அந்த இடத்துக்கு மதுரையிலிருந்து மயில்வாகனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தை சரியான முறையில் கையாண்டவர் என்பதும், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு, சீரிய பணியாற்றியதற்காக சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் மயில்வாகனனுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!