Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'செப்டம்பரில் செழிப்பா இருப்போம்...' - தமிழ்நாடு வெதர்மேன் உறுதி!

'செப்டம்பர் மாதம், தமிழகத்தில் நல்ல மழைப் பொழிவு இருக்கும்' என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மழை


தமிழகத்தில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கியபோதும், சிறப்பான மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இதனிடையே, இந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே தமிழகம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், தமிழக அணைகளின் நீர் மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 'தமிழ்நாடு வெதர்மேன்' என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  "கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆகஸ்ட் மாதம் ஈரப்பதம் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, இந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் அதிக மழைபெய்ய வாய்ப்புள்ளது. இந்தமுறை தென் மாவட்டங்களும் மழைப் பொழிவைப் பெற உள்ளன. மாதத்தின் தொடக்கம் முதலே, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement