Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

171 ஆட்சியர்களில் சேலம் கண்ட முதல் பெண் கலெக்டர்!

ரோப்பிய நாடுகளில் அனைத்துக் கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்வதற்கு வசதியாகச் சாய்வுதளபாதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நம் நாட்டில் அரசுக் கட்டடங்களில்கூட, இந்தச் சாய்வுதளபாதை அமைக்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகள் பற்றிய சிந்தனையே பெரும்பாலும் நம் அரசிடம் இருப்பதில்லை. ஆட்சியர் அலுவலகங்களில்கூட படிக்கட்டுகளில் ஊர்ந்து சென்றும் ஏற முடியாமல் ஏறிச் சென்றும் மனு கொடுக்கும் பரிதாப நிலையில்தான் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டர்

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ரோகிணி பாஜிபக்கரே நேற்று கலெக்டராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் மாவட்டத்தில் இதுவரை 171 ஆட்சியர்கள் பணிபுரிந்துள்ளனர். முதல் பெண் ஆட்சியர் இவர்தான். நேற்று, திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அப்படி வந்திருந்த மக்களிடம் ரோகிணி, அன்புடனும் கருணையுடனும் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்தார். மாற்றுத்திறனாளிகள் அமர தனி சேர் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் சேரில் அமர்ந்திருக்க தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர், அவர்களின் குறைகளைக் கேட்டது புருவத்தை உயரச் செய்தது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் சேலம் மாவட்டம் சிறந்து விளங்க பாடுபடப்போவதாக ரோகிணி தெரிவித்துள்ளார். இதற்கு முன், மதுரை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக இவர் பணிபுரிந்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement