Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இதுக்கும் எனக்கும் அதுக்கும் எனக்கும்'- செய்தியாளர்களிடம் கலகலத்த செந்தில்

நாஞ்சில் சம்பத் வீடு தாக்குதல், பா.ஜ.க, தி.மு.க தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், "என்னைப் பற்றி மட்டும் கேளுங்கள்" என்று நடிகர் செந்தில் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அ.தி.மு.க.,  ஓ.பன்னீர்செல்வத்தால் தற்போது பழனிசாமி அணியுடன் இணைந்துள்ளது. இது, சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சசிகலா ஒப்புதலோடு தினகரன் நீக்கிவருவதோடு, தனது ஆதரவாளர்களை அந்தப் பதவிக்கு நியமித்தும்வருகிறார். பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவியைப் பறித்த தினகரன், அந்தப் பதவிக்கு நடிகர் செந்திலை நியமித்தார்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை இன்று சந்தித்துப் பேசினார் நடிகர் செந்தில். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான். அனைத்துப் பிரச்னைகளையும் அவரே பார்த்துக்கொள்வார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசியதற்கு நாஞ்சில் சம்பத் வீடு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரமாகப் பேசமுடியாத சூழ்நிலை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த செந்தில், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். என்னைப் பற்றி மட்டும் கேளுங்கள். 'இதுக்கும் எனக்கும் அதுக்கும் எனக்கும்' என்று கூறினார்.

தினகரன் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தப்போது பா.ஜ.க-வினர்... என்று செய்தியாளர் கேள்வியை முடிக்கும் முன்பே, அதுக்கெல்லாம் நான் வரவில்லை. என்னுடையதைக் கேளுங்கள் என்று சிலாய்த்தார் செந்தில்.

பா.ஜ.க பற்றிய கேள்விக்கு, அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement