Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயா டி.வி யாருக்குச் சொந்தம்? வைரலாகும் ஜெயலலிதா வீடியோ!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடந்த போட்டி தற்போது ஜெயா டி.வி-யைக் கைப்பற்றுவதில் வந்து நிற்கிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து அவரைத் துணை முதல்வராக்கி, சசிகலா குடும்பத்துக்குச் சவால் விட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா


குறிப்பாக, நேற்று அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்களில்,' ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் கழகத்தின் சொத்துகள். அவற்றை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தினகரன் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியது அந்தத் தீர்மானம்.

இதையடுத்து, "தனியார் நிறுவனமான ஜெயா டி.வி-யைக் கைப்பற்ற முடியாது" என்று ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதனால், ஜெயா டி.வி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், ஜெயா டி.வி குறித்து ஜெயலலிதா பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

2013-ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்த, 'விஸ்வரூபம்' பட பிரச்னை குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஜெயா டிவி-க்கு விஸ்வரூபம் பட உரிமம் கிடைக்காததற்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது. ஜெயா டி.வி அ.தி.மு.க-வை ஆதரிக்கும் ஒரு தொலைக்காட்சி. ஜெயா டி.வி ஒரு தனியார் நிறுவனம். அது எனக்கோ அல்லது கட்சிக்குச் சொந்தமானது இல்லை. நான் அதில் எந்தப் பங்குகளையும் போடவில்லை. எனக்கும் ஜெயா டி.வி-க்கும் சம்மந்தம் இல்லை" என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement