Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வருவோருக்குக் குறையில்லாத சாப்பாடு! அசத்தும் மதுரை கலெக்டர்

கலெக்டர்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத மாவட்டம் மதுரை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் மட்டுமல்ல, வேறு இடங்களிலிருந்து வந்து பணியாற்றும் அதிகாரிகளிடமும் சுவாரஸ்யமான விசயங்கள் நம்மை உச்சுக்கொட்டவைக்கும். மதுரையில் பணியாற்றும் அதிகாரிகள், ஏதாவது ஒன்றில் ஃபேமஸ் ஆகிவிடுவார்கள். நெல்லை கலெக்டராகி, விவசாயத் திட்டங்களில் கலக்கும் சந்திப் நந்தூரி, மதுரையில் கார்ப்பரேஷன் கமிஷனராகப் பணியாற்றியவர், சேலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற உடனே, பல பரபரப்பான திட்டங்களைச் செய்துவரும் ரோகிணி ராம்தாஸ், மதுரையில் கூடுதல் கலெக்டராகப் பணியாற்றியவர்.

இப்படி மதுரையில் பணியாற்றும், பணியாற்றிய பல அதிகாரிகளின் பெயர், மக்களிடையே  எளிமையாகப் பதிந்துவிடும். தற்போது மதுரையில் பணியாற்றும் ஆட்சியர் வீரராகவ ராவ், குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வரும் ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களுக்கு உணவு வழங்குகிறார். குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்கும் இவர்களிடம் மனுக்களைப் பெற்றுவிட்டு, உடனடியாக அவர்கள் கையில் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிடுகிறார்.

பசியோடு காத்துக்கிடந்து மனு கொடுக்க வரும் இவர்களுக்கு, கலெக்டர் உணவு வழங்குகிறார். இதனால், பலரின் ஆதரவைப் பெற்று வருகிறார். 'அன்சுல் மிஸ்ரா, சகாயம்  கலெக்டர்கள்போல வீரராகவ ராவும் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்' என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement