Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க-வின் ரகசியங்களை வெளியிட்டால் என் உயிருக்கே ஆபத்தாகிவிடும்! - பகீர் கிளப்பும் எம்.பி. நாகராஜ்

'எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், தினகரன் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பேசி ஒரு முடிவெடுக்கவில்லை என்றால் நான் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும்' என்று தெரிவித்துள்ளார் தினகரன் அணியில் இருக்கும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ்.

எம்.பி.நாகராஜ்

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்குச் சென்று கொண்டு  இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ், விபத்து நடந்த இடத்திற்கு நேராகச் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுநர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

"அ.தி.மு.க-வில் அணிகள் என்று எதுவும் இல்லை. கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம். அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைப் பேசித்தீர்க்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆன்மா அனைவரையும் சண்டை போடச்சொன்னதா? குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்களும், கருத்து வேறுபாடு உள்ளவர்களும் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

 ஜெயா டி.விக்கான பணிகளை 5 ஆண்டுகளாக நான்தான் கவனித்து வந்தேன்.  அனைவரும்  ஒன்று சேர வேண்டும் என்பதே அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே என்னைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால், எங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். மூன்று பேரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் என்றவர்,

ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டுச் சதி என்ற பிரிவில், சேர்க்கப்பட்டிருந்தது. அந்த வழக்கிற்காகவே சசிகலாவை ஜெயலலிதா சில காலம் விலக்கி வைத்திருந்தார். டி.டி.வி தினகரன் கட்சிக்காக சிறைக்குச் சென்றவர். சசிகலாவிடம் கட்சிப் பதவிக்காக போய் நிற்காதவர். இங்கு எவருமே இல்லை. பல உண்மைகள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அவற்றை வெளியிட்டால் எனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது.

கூட்டணிகளைக் கூட இறுதி செய்தது சசிகலாதான். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் நாகராஜன் தெரிவித்தார்.  இன்று நடந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement