வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (29/08/2017)

கடைசி தொடர்பு:15:45 (29/08/2017)

சாலையை ஆக்கிரமித்த நூற்றாண்டு விழா பேனர்கள்!

அ.தி.மு.க அணிகள் சார்பில்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்த பிறகு தமிழக அரசு சார்பாக நடந்து வரும் நூற்றாண்டு விழாவில் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

 


இதற்காக சென்னை கிண்டி முதல் வண்டலூர் வரை ஜி.எஸ்.டி சாலையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். இவற்றில் பல சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள், விமான நிலையம் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையில், இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றில் சில பேனர்கள் சாலையில் விழுந்தும் கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்பவர்கள் மிகுந்த  சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

poster on gst road