தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி திடீர் ராஜினாமா! | Tamilnadu Advocate General Muthukumarasamy resigns

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (29/08/2017)

கடைசி தொடர்பு:15:52 (29/08/2017)

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி திடீர் ராஜினாமா!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

முத்துக்குமாரசாமி


70 வயதாகும் முத்துக்குமாரசாமி, உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளாக ராஜீவ் கொலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தவர் முத்துக்குமாரசாமி. அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகக் கடந்த ஆகஸ்ட் 2016-ல் பதவியேற்ற முத்துக்குமாரசாமி, கடந்த 1994-ல் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிவர். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றிவுள்ளார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.