நம்மை 1960-களுக்கு அழைத்துச் செல்லும் பிரத்யேக 'சித்திரம்' செட்!

ரு படம் பார்க்கும்போது அந்தக் கதையின் காலம், இடம், சூழல் முதலியவற்றைத் தத்ரூபமாகப் பார்ப்பவர்களை உணரச் செய்வது, அப்படத்தின் கலை இயக்கம்தான். எங்கோ இருக்கும் ஒரு பனிப்பிரதேசம், புகழ்பெற்ற ஆலயம், காடு, கடல், அரண்மனை போன்ற இடங்களை  நான்கு சுவருக்குள் அமைத்து, அது அங்கு ஷூட் செய்தது போலவே காட்சி அமைத்து தரும் கலை இயக்குநர்களின் திறமை என்றுமே வாவ்தான்.

கலை இயக்கத்தின் (ஆர்ட் டைரக்ஷன்) பெருமைக்குப் பறைசாற்றும் விதமாக அண்ணா பல்கலைக்கழக ஊடக மாணவர்கள் 1960-களில் தமிழகத்தின் கிராம தெருக்களின் அமைப்பைத் தத்துரூபமாக இருப்பதுபோல் செட் அமைத்திருக்கிறார்கள். பழைய டென்டு கொட்டாய், இந்தியன் டீ கடை, பானை செய்யும் குயவனின் வாழ்விடம், மூலிகை மருந்துக்கடை, திண்ணை கொண்ட வீடு, ஐஸ் வண்டி என காண்போருக்கு பழைய வீதிக்குள் நடக்கும் உணர்வை தருகிறது இந்த ’சித்திரம்’ செட் கண்காட்சி.

இந்தக் கண்காட்சிக்கு விருந்தினராகக் கலந்துகொண்ட கலை இயக்குநர் ’கிரண்’, மாணவர்களின் படைப்பைப் பாராட்டியதுடன், கலை இயக்கம் மற்றும் தனது அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். "ஒரு படத்துக்கு திரைக்கதை இயக்கம் எவ்வளவு முக்கியமோ கலை இயக்கமும் அவ்வளவு முக்கியம். படம் பார்ப்பவர்களுக்கு கதையின் தாக்கத்தை உருவாக்குவதும் உணரச் செய்வதும் அதன் கலை இயக்கம்தான்" என்று கூறினார். நடிகர் கிரண் அனேகன், கோ, கவண் ஆகிய படங்களின் கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் 1897-ல் கட்டப்பட்ட அப்பத்தா இல்லம்!

 

முருகன் மருந்துக்கடை வைத்தியர் கடைங்க இது!

 

ஆளே இல்லனாலும் டீ ஆத்துவாரு நம்ம சேட்டா!

 

இட்லி 50 காசு, தோசை 25 காசுதான் - அக்கா விலாஸ் மட்டும்!

 

கலை இயக்குநர் கிரண் கேட்ட 'கிரீன் டீ' போடத் தெரியாம முழிக்கும் சேட்டா!

 

வெத்தல பாக்க உரல்ல இடிச்சு மென்னுட்டு இருக்குறது இந்த அப்பத்தா பொழப்பு!

 

நாள்முழுக்க மண்ணுல வேல செஞ்சாலும் அவங்க வெட்டி பளிச்சு பளிச்சுங்கோ!

 

இவரு எப்போ வருவாருன்னுதான் ஊரு பெண்கள் எல்லாம் வைட்டிங்- வளையல்கார மாமா!

 

நம்ம சண்முகம் டென்டு கொட்டாயில இன்னைக்கு 'கர்ணன்' படம் ஓடுது டி!

 

இந்த மருந்துக்கடையில மாத்திரை, டானிக் எல்லாம் கிடையாது.

 

பூஜா, திருட்ஷ்டி பொருள்களுக்கு எல்லாம் அப்போ மார்க்கெட் அதிகம்!

 

கலை இயக்குநர் 'கிரண்' மாணவர்களிடம் தன் கலை உலக அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டிருந்தபோது...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!