குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோது நடந்த சோகம்! - எமனாக மாறிய சிமென்ட் லாரி | Ariyalur accident : 25 people severely injured

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:00 (29/08/2017)

குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோது நடந்த சோகம்! - எமனாக மாறிய சிமென்ட் லாரி

அரியலூரில், வேனும் சிமென்ட் லாரியும் மோதியதில் 20 பெண்கள் உட்பட 25 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

           

கடலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் இருந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்துக்கு வேனில் 30க்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர். இந்நிலையில், வேன் சின்ன வெண்மணி என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் வேன் தலை குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

                

இதில் வேன் ஓட்டுநர்  பச்சையப்பன் மற்றும் தெய்வானை ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த 20 பெண்கள் உட்பட 25 பேர் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு அரியலூர் டூ செந்துறை சாலையில் உள்ள ஒட்டக்கோவில் கிராமத்தில் ஏற்பட்ட விபத்தில் 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

           

கடந்த ஆண்டு ஜெயங்கொண்டத்தில் நடந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சிமென்ட் லாரிகளால்தான் அதிக அளவிலான விபத்துகள் நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.