Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் வின் ஸ்டார் சிவக்குமாருக்கு பிடிவாரன்ட்

சேலத்தில் வின் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமாரை சேலத்தில் தெரியாதவர்கள்  இருக்க முடியாது. காரணம் மொபைல் ஷாப், நெல்லிக்காய் குளிர்பானம், சிறுதானிய விற்பனை, ரியல் எஸ்டேட் எனப் பல தொழில்கள் நடத்தக்கூடியவர். அத்தொழில்களில் திடீர் திடீரென அதிர்ச்சி தரும் வகையில் ஆஃபர் விட்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துவார். அதேபோல பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து இவர் மீது புகார்களும் குவியும்.

பெரும்பாலும் இவருடைய நிறுவனத்தில் பெண்களையே வேலைக்குச் சேர்த்துக்கொள்வார். சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என்பது தொடங்கி, நெல்லிக்காய் குளிர்பானத்தில் கலப்படம், ரியல் எஸ்டேட் கல்தா, பாலியல் புகார் என அடுக்கடுக்கான புகார்களோடு அலுவலகத்தின் எதிரே போராட்டகள் செய்வதோடு தீ குளிக்கும் சம்பவங்களும்  நடக்கும்.

சேலம் பெரிய புதூரைச் சேர்ந்த பழனிசாமி. இவர் 2015 தவணை முறையில் வீடு கட்டுவதற்காக சேலம் ஐந்து தியேட்டருக்கு எதிரில் உள்ள வின் ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் 1லட்சத்து 50 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். அவருக்கு வீடும் கட்டித் தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை என்பதால் அந்நிறுவனத்தின் எதிரே போராடினார். அதையடுத்து வின் ஸ்டார் நிறுவனம் அவருக்கு 1.5 லட்சத்துக்கான காசோலை வழங்கியது.

அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் எடுக்க முயன்று இருக்கிறார். அந்தக் காசோலை கணக்கில் பணம் இல்லாததால் கோபம் கொண்ட பழனிசாமி சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் வின்ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் தொடர்ந்து ஆஜராகாததால் இன்று வின் ஸ்டார் சிவக்குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement