Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வறட்சியால் விலையேற்றம்.. பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம்!

ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகைக்காக மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு ஏராளமானோர் குவிந்த நிலையில், விலையேற்றம் காரணமாக ஆடு வாங்க வந்திருந்த இஸ்லாமிய மக்கள் ஏமாற்றமடைந்தனர்.   

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் கடமைகளில் ஒன்றான ஈகையை வலியுறுத்தும் வகையிலான இந்தப் பண்டிகையின்போது, ஏழை மக்களுக்கு இறைச்சியைத் தானமாகக் கொடுப்பது வழக்கம். இந்நிலையில், மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று பல்வேறு இடங்களிலும் இருந்து செம்மறி ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கிச் செல்லவும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆடுகள் விற்பனை

களைகட்டிய இன்றைய ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவற்றை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். குர்பானிக்காக அவற்றை வாங்கிச் செல்ல ஏராளமான இஸ்லாமிய மக்கள் வந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு வறட்சி காரணமாக ஆடுகள் குறைவாகவே வந்திருந்தன. அதனால், அவற்றின் விலை அதிகமாக இருந்தது. 

வறட்சியைச் சமாளித்து வளர்க்கப்பட்டதுடன், ஆடுகளுக்கான தீவனத்தின் விலையும் தாறுமாறாக ஏறியதால் ஆடுகளின் விலையும் எகிறிப் போய் இருந்தது. கடந்தாண்டு 7,000 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட தரமான ஆடுகள் இந்தாண்டு 15,000 முதல் 20,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனால், அவற்றை வாங்குவதற்காக வந்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுபற்றி பேசியவர்கள், ‘’இந்த ஆண்டு வறட்சி நிலவுவதால் ஆடுகள் குறைவாகவே விற்பனைக்கு வந்துள்ளன. அதனால் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. சாமான்ய மக்கள் ஆடுகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைமை இருக்கிறது’’ என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement