வெளியிடப்பட்ட நேரம்: 03:13 (30/08/2017)

கடைசி தொடர்பு:08:30 (30/08/2017)

காரைக்குடியில் பெண்களிடம் கத்தியைக் காட்டி நகை பறிப்பு!

 

காரைக்குடி அருகே உள்ள சின்ன வடகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் மனைவின் ஜோதி மீனாள். அவருக்கு வயது 38. அவரும் அவருடைய தம்பி மனைவியும் காரைக்குடி செல்வதற்காக சின்ன வடகுடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றுள்ளனர். பேருந்து வராததால், நேமத்தான்பட்டி சென்று பேருந்து ஏறி காரைக்குடி செல்லலாம் என இருவரும் நடந்துசென்றுள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து, அவர்களிடம் வழி கேட்டுள்ளனர். வழியைக் காட்டிவிட்டு ஜோதி மீனாளும் அவருடைய தம்பி மனைவியும் நடக்கத் தொடங்கியுள்ளனர். வழிகேட்ட 2  நபரும் மீண்டும் வந்து கத்தியைக் கழுத்தில் வைத்து, ஜோதி மீனாள் அணிந்திருந்த 3 பவுன் செயின் அரை பவுன் தாலியையும் அவருடைய தம்பி மனைவி அணிந்திருந்த 2 பவுன் செயின் அரை பவுன் தாலியையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம்குறித்து செட்டிநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க