Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம்பிக்கை வாக்கெடுப்பு: குடியரசுத்தலைவரிடம் முறையிட தி.மு.க முடிவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக குடியரசுத்தலைவரை வரும் 31-ம் தேதி சந்தித்து முறையிட உள்ளதாக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அ.தி.மு.க-வின் தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். பேரறிவாளன் பரோல் விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ’தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்குறித்து முறையிடுவதற்காக தி.மு.க, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவரிடம் நேரம் கேட்டுள்ளோம். சந்திப்புக்கான நேரம், வரும் 31-ம் தேதி ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. நேரம் கிடைத்தவுடன், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிடுவார்கள்’ என்று அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், ஆளுநர் உடனடியாகத் தலையிட வலியுறுத்தி, குடியரசுத்தலைவரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement