தமிழக அரசு அறிவித்தபடி வேலை வழங்கவில்லை..! ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்

'தமிழக அரசு அறிவித்தபடி  அரசு இன்னும் வேலை வழங்கவில்லை' என்று ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். 


பாரா லிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு, மத்திய அரசு நேற்று அர்ஜுனா விருது வழங்கியது. அர்ஜுனா விருது வாங்கிய பின், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதற்காக கேல் ரத்னா விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு அர்ஜுனா விருதுதான் அளித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் உத்வேகத்துடன் செயல்படுவேன். தற்போது ஆசியப் போட்டியில் பங்கேற்பதற்காக கவனம்செலுத்திவருகிறேன்.

கடந்த முறை, ஒலிம்பிக்கில் 1.89 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். தற்போது 2 முதல் 2.10 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு வைப்பதற்கு தொடர் பயிற்சிகள் எடுத்துவருகிறேன். தமிழக அரசு வேலை தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், இன்னும் தரவில்லை. பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியுள்ளது. அத்தகைய பதவியை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!