Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முத்தலாக் முறை தொடரவேண்டும்..! குரல் எழுப்பும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறைகுறித்து, சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்புக் கூறியது. இந்தத் தீர்ப்புகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., சித்திக்குல்லா சௌத்ரி பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "இஸ்லாமியர்களான நாங்கள் தலாக் முறையை நம்புகிறோம். மூன்று முறை தலாக் சொல்லும் முறை தொடர்ந்து அதே வழியில் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இது, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக ஆகாதா? என்று அவரிடம் கேட்டபோது, "நான் சொல்வதில் நீதிமன்ற அவமதிப்பு உள்ளதா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கட்டும். அதற்கு முன்பாக ஊடகங்கள் தீர்மானிக்கக்கூடாது. நான் என்ன சொல்கிறேனோ அது சரியானதுதான். ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு இந்த விவகாரம்குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலாக்

இஸ்லாமிய சமூகத்தில் தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாய்ரா பானு மேலும்  நான்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஓர் இஸ்லாமிய அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதன் காரணமாகவே, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், முத்தலாக் முறை சட்டவிரோதம் என 395 பக்கங்கள் அடங்கிய பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. ஐந்து நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள் இந்தமுறைக்கு ஆதரவு தெரிவித்தனர். மூன்று நீதிபதிகள் முத்தலாக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரும்பான்மை நீதிபதிகள், எதிர்ப்பு என்ற வகையில் முத்தலாக் முறை சட்டவிரோதம் என்று தீர்ப்புக்கூறப்பட்டது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement