Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வலியுறுத்தி டி.விகளை உடைத்துப் போராட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணியினர், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, டி.வி களை ரோட்டில் போட்டு உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட மாணவரணிச் செயலாளர் கவியரசன், ''ஒருவருடைய அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் நோக்கில், பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதனால், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு பாழ்பட்டுப்போகிறது.


தமிழ் நாட்டில் கூடங்குளம் அணுஉலைப் பிரச்னை, கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. பிரச்னை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு,  நீட் தேர்வில் தமிழக மருத்துவ மாணவ, மாணவியர் பாதிப்பு, தமிழக விவசாயிகள் பிரச்னை எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளைப் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாத விதத்தில் திட்டமிட்டே திசை திருப்புவதற்காக, இந்த விஜய் டி.வி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.


இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள், ஆபாசமான உடைகள் அணிந்து வருவதால், குடும்பப் பெண்கள் வழி தவறிப் போக வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தோடு டி.வி., பார்க்க முடியவில்லை... அருவருப்பாக இருக்கிறது. நாம் விருப்பப்பட்டால் பார்க்கலாம். இல்லையென்றால் பார்க்காமல் போகலாம். குடும்பத்திற்குள் அனைவரும் அமர்ந்து பார்க்கும் டி.வி நிகழ்ச்சிகளுக்குக் கட்டாயம் தணிக்கைக் குழு அமைக்க வேண்டும். தணிக்கைக் குழு இல்லாததால்தான், இப்படிப்பட்ட ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" என்றார்.
-


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement