குட்கா விவகாரம்: தி.மு.க-வின் மனு முன்கூட்டியே விசாரணை

குட்கா விவகாரத்தில், சி.பி.ஐ விசாரணைக் கோரிய தி.மு.க-வின் மனுவை கூட்டியே விசாரிப்பதற்காக செனை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்


தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 

சட்டசபையிலும் இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது. இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியான டி.கே.ராஜேந்திரனின் பதவியை மேலும் நீட்டித்ததுக்கு எதிராகவும், சி.பி.ஐ விசாரணைக் கோரியும் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வருகின்ற செப்டம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அன்பழகன் சார்பில், வழக்கறிஞர் நீலகண்டன் முறையீடு செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!