Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை சென்னை வரவும்! அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் பழனிசாமி அவசர அழைப்பு!

பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் நாளை தலைமைச்செயலகம் வர முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

edappadi palanisamy
 

தினகரன், கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளைக் கட்சியைவிட்டு நீக்கிவருகிறார். இதனிடையே, 'தினகரனின் அறிவிப்புகள் செல்லாது' என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க பொதுக்குழு, செப்டம்பர் 12-ம் தேதி கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும்  நாளை தலைமைச்செயலகத்துக்கு வர வேண்டும்' என்று முதல்வர் பழனிசாமி இன்று திடீரென உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்களை முதல்வர் சந்திக்க உள்ளார். தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில், நாளை தலைமைச் செயலகம் செல்லயிருப்பதாக தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement