செப்.1 முதல் ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் 3 மாதம் சிறை! 

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன் படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (செப்.1) முதல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. 

ஓட்டுநர் உரிமம்


மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 130-ன் படி பொது இடத்தில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைக் கோரும்போது அக்காவல் அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை உட்படுத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 181-ன் படி உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கலாம். 

மேலும், சாலைப் பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழு, சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க/ரத்து செய்ய அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. 2017, செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களை ஓட்டும்போது அனைத்து ஓட்டுநர்களும் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 01.09.2017 முதல் வாகனங்களை ஓட்டும்போது அனைத்து வாகன ஓட்டுநர்களும் அசல் ஓட்டுநர் உரிமத்தைத் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!