Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திருநங்கை ஏஜென்சி!' - திருநங்கையின் புது முயற்சி

 

thiunangai

திருநங்கையான பாரதிகண்ணம்மா, ஆதரவற்ற நிலையில் இருக்கும் திருநங்கைகளை மீட்டு சமூக ஆர்வலர்களின் ஆதரவோடு உதவி செய்துவருகிறார் . ஜல்லிக்கட்டுப் போராட்டங்களில் இளைஞர்களுக்கு ஆதரவு கொடுத்து கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர். தொடர்ச்சியாக ஏழை எளியவர்களுக்காகவும் திருநங்கைகள் முன்னேற்றத்துக்காகவும் பல முயற்சிகள் எடுத்துவருபவர். இந்நிலையில், திருநங்கைகள் தொழில்செய்து வாழ்வில் முன்னேற, திருநங்கை ஏஜென்சியை மதுரை தெற்குவெளி வீதியில் உருவாக்கியுள்ளார். இதற்கான தொடக்கவிழாவில் மாவட்ட ஆட்சியரை பங்கேற்று திறந்துவைக்க அழைத்து, அதற்காக இன்று மனு அளித்தார்.

திருநங்கை பாரதி கண்ணம்மாவிடம் பேசினோம் "சமுதாயத்தில் திருநங்கைகள் பற்றி தவறான புரிதல் உள்ளது. அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்துக்கே அவப்பெயர் உருவாகிறது. எனவே, அதை மாற்ற வேண்டும் என 7 வருடங்களுக்கு மேலாகப் போராடிவருகிறேன். என் முயற்சியால் பல நபர்களை நல்வழிப்படுத்தியுள்ளேன். தற்போது திருநங்கை ஏஜென்சி என்ற பெயரில் திருநங்கைகளை வணிகம் சார்ந்த தொழில் செய்ய வைக்க உள்ளேன். வணிகர்கள் சங்கங்களின் உதவியோடு பொருள்களைக் குறைவான விலைக்கு வாங்கி மக்களிடையே நேரடியாகக் கொண்டு செல்ல உள்ளோம். காய்கறி, பலசரக்கு, மூலிகைப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட பலவற்றைத் தரமான முறையில் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்ய உள்ளோம். நியாயமான விலையில் பொதுமக்களுக்கு நிறைவான சேவை செய்ய உள்ளோம். உயர் நீதிமன்றம் திருநங்கைகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சலுகைகள் அளித்தாலும் திருநங்கைகள் சொந்தமாக முயற்சி செய்து முன்னேறும் நிகழ்வு பாராட்டப்படும். மேலும், தவறான வழியில் செல்லும் திருநங்கைகளுக்கு நல் வழிப்பாதையாக அமையும். எனவே, இதற்கான திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வருகை புரிந்தால் அனைவருக்கும் ஊக்கமாக இருக்கும். அவர் பங்கேற்பார்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement