Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் வெறியாட்டம்! உயிரைப் பறித்த டீக்கடை அரசியல் பேச்சு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் அருகேயுள்ளது மண்டக்காடு கிராமம். இக்கிராமத்தில் குடித்துவிட்டு டீக்கடையில் உட்கார்ந்து வெட்டி அரசியல் பேசிக்கொண்டிருந்த ராமலிங்கம் (42), சொக்கலிங்கம் (68) ஆகிய இருவரும் ஒருக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் சொக்கலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் ராமலிங்கம் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் ராமலிங்கம் இன்று அதிகாலையில் மருத்துவமனைக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மண்டக்காடு கிராம மக்கள் புதுக்கோட்டை ஸ்ரீமீனாட்சி மருத்துவமனையில் முகாமிட்டிருந்தார்கள். அவர்களிடம் பேசும்போது, ‘பத்து நாள்களுக்கு முன்னாடி எங்க ஊர்ல இருக்குற பால் பூத் அருகே ரெண்டு பேரும் தாக்கிக்கிட்டாங்க. பிறகு ராமலிங்கம் அவரது மாமனார் ஊரான, புதுக்கோட்டை அருகே இருக்குற வீரபட்டி கிராமத்துக்குப் போயிட்டார். அங்கே போனவருக்கு உடல்நிலை சரியில்லை. உடனே மாமனார், ஸ்ரீமீனாட்சி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இவரை மருத்துவமனையில் கவனித்துக் கொள்வதற்காக இவரது அம்மா ஊர்ல இருந்து வந்திருந்தாங்க. சம்பவம் நடந்த அன்று ராமலிங்கம் அம்மா கீழ் தளத்தில் வந்து தூங்கியிருக்காங்க. காலையில் எழுந்து போய் அவனுடைய அறைய திறந்து பார்த்தவுடன் ரத்த வெள்ளத்தால் தன்னுடைய மகன் கிடப்பதைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டார்.

ராமலிங்கம் இறந்த  தகவல் டாக்டருக்கு நர்ஸ்கள் மூலம் தெரியப்படுத்தியிருக்காங்க. உடனே ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ராமலிங்கத்துக்கு தையல் போட்டு ரெஸ்ட் ரூம்ல கொண்டாந்து போட்டுட்டாரு. இதுக்கு முன்னாடி எங்க ஊருக்கு தகவல் வந்து நாங்களும் வந்துட்டோம். இப்ப நாங்க கேட்கிறது டாக்டர் ஏன் போலீஸுக்குத் தகவல் கொடுக்காமல் இவரே தையல் போட்டு வேகமாக தூக்கிட்டு போங்கன்னு ராமலிங்கம் அம்மாவை மிரட்டியிருக்கிறார். ராமலிங்கம் ரெண்டு வார்த்தை மட்டும் பேசியிருக்கார் "ரெண்டு பேர் வந்தாங்க. ஒருத்தன் குட்டையாக இருந்தான். இன்னொருத்தன் உயரமாக இருந்தான்னு” மட்டும் சொன்னவன் இருமிருக்கான் ரத்தம் வாய் வழியாக வந்ததும் இறந்துட்டான். சொத்துப் பிரச்னையோ, கொடுக்கல் வாங்கல் பிரச்னையோ கிடையாது. பத்து பைசாவுக்குகூட பிரயோசனம் இல்லாத சண்டை.  இன்னைக்கு உயிரை எடுத்துவிட்டது. இப்ப நாங்க ஆஸ்பத்திரியில் உள்ள கேமராக்களை செக் பண்ண சொல்லியிருக்கிறோம். அத பார்த்தப் பிறகு தான் மற்ற முடிவு எடுக்க முடியும்’ என்று முடித்தனர்.

சொக்கலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement