நீதிமன்றத்தை அரசியல் களமாக்க வேண்டாம் - தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

நீதிமன்றத்தை அரசியல் களமாக்க தி.மு.க. முயற்சி செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் உள்ள சேலம் கச்சராயன் ஏரியைப் பார்வையிடச் சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்ட எல்லையில் ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஸ்டாலின் சேலத்துக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி போலீஸார் கைது செய்தனர். இதை எதிர்த்து தி.மு.க. சட்டப்பிரிவு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், கச்சராயன் ஏரியைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கவே ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று கூறி வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. முரண்பாடான தகவல்களோடு வழக்குத் தொடர்ந்திருக்கும் தி.மு.க., சென்னை உயர் நீதிமன்றத்தை அரசியல் களமாக்க முயற்சி செய்திருப்பதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற அனுமதியுடன் சேலம் கச்சராயன் ஏரியை ஸ்டாலின் நாளை பார்வையிட உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!