Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி - தயாராகும் விவசாயிகள்..!

பவானி சாகர் அணையிலிருந்து தமிழக அரசு உடனடியாக தண்ணீரைத் திறந்துவிடவில்லை என்றால், செப்டம்பர் 6-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று திருப்பூரில் அறிவித்திருக்கிறார்.

கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் மக்கள் மன்றம் அமைப்பாளர் செல்லப்பன் ஆகியோர், இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் உயிர் தண்ணீரைத் திறந்துவிடும் இந்த அரசு, ஏன் கீழ்ப் பவானியில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று தெரியவில்லை. கடந்த  இரண்டு ஆண்டுகளாகவே கீழ்ப் பவானி பாசனம் தமிழக அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது.

கீழ்பவானி பாசனப் பகுதி மக்களுக்குத் தண்ணீர் கேட்டு கடந்த ஜூலை மாதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்திருந்தோம். திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறோம். ஆனால், தண்ணீரைத் திறந்துவிடாமல் தொடர்ந்து எங்களை வஞ்சித்துவருகிறது தமிழக அரசு. கீழ்ப் பவானியின் பாசனப் பகுதிகள் மொத்தமாகக் கடும் வறட்சியைச் சந்தித்துவரும் சூழலில், பவானி சாகர் அணையிலிருந்து உயிர் தண்ணீரைத் தமிழக அரசு திறந்துவிடவில்லை என்றால், கீழ்ப் பவானி பாசனத்தை நம்பியிருக்கும் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.  விவசாயிகளைக் காப்பாற்றவேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது. அதை செய்யத் தவறினால், வரும் செப்டம்பர் 6-ம் தேதி, ஈரோடு மாவட்டத்துக்கு வரவிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம்" என்று தெரிவித்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement