Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் அண்ணா எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போட அனுமதி!

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தினகரன்

 

 

டி.டி.வி தினகரனால் புதுக்கோட்டை அ.தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில், 'நான் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக டி.டி.வி தினகரனால் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். ஆகவே, செப்டம்பர் 1-ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு எனது கட்சி காரர்களுடன் மாலை அணிவிப்பதற்காகப் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தேன். அனுமதி வழங்கியோ, நிராகரித்தோ எந்தப் பதிலும் காவல்துறை தரப்பில் இல்லை. எனவே, அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' எனக் கேட்டிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் செப்டம்பர் 1-ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்குக் கார்த்திகேயன் காவல் துறை பாதுகாப்புடன் மாலை அணிவிக்கலாம் என உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement