Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரியில் நாளை முதல் விநாயகர் சிலைகள் கரைப்பு

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால், பாதுகாப்புப் பணிகளுக்காக, வெளிமாவட்டத்திலிருந்து எட்டு கம்பெனி சிறப்புப் பட்டாலியன் போலீஸார் உள்பட 1500 பேர் குமரிமாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயர் சதுர்த்தி விழா கடந்த 25-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. குமரிமாவட்டத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா போன்ற பல்வேறு இந்து சார்ந்த அமைப்புகளின் சார்பில் சுமார் 4500 விநாயகர் சிலைகள் குமரி மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாளை நாகராஜா திடல், மேல்புறம், மணவாளக்குறிச்சி பகுதிகளுக்கு ஊர்வலம் செல்கிறது. இதேபோல் 3-ம் தேதி நாகராஜா திடல் உள்பட 10 இடங்களில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலங்கள் செல்வதற்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிக்கொண்டான் அணை, மண்டைக்காடு, வெட்டுமடை, சின்னவிளை, மிடாலம், குழித்துறை ஆறு, திற்பரப்பு அருவி, தேங்காய்பட்டிணம் கடல்பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை ,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து எட்டு கம்பெனி சிறப்பு பட்டாலியன் போலீஸாரும், ஆயுதப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர குமரிமாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸார், ஊர்க்காவல் படை, சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸார் என 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 2-ம் தேதி சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா, இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement