Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரியின் கொடைக்கானல் தற்போது தனியார் வசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையின் சிகரப் பகுதிகளான பாலமோர், மாறாமலை, மேல் கோதையாறு ஆகியவை உள்ளன. இவை, சுமார் 2,600 அடி உயரம் கொண்ட குளுமையான காலநிலை நிலவும் பகுதிகளாகும். இதில், இரட்டைச் சகோதரிகள் என வர்ணிக்கப்படும் பாலமோர் மற்றும் மாறாமலை, குமரியின் கொடைக்கானல் என்றும் அழைக்கப்படுகிறது. விண்ணைத் தொட்டு நிற்கும் மலைமுகடுகளும், கைக்கு எட்டும் தொலைவில் அலையும் மேகங்களும், ஆர்ப்பரித்து பள்ளத்தாக்குகளில் விழுந்து ஓடும் அருவிகளும், பசுமை போர்த்தி நிற்கும் தேயிலை மற்றும் கிராம்புத் தோட்டங்களும், இங்கு நிலவும் இதமான குளிரும் மனதுக்கு இதமளிப்பதாக இருக்கின்றன. கீரிப்பாறை காளிகேசம் ஆற்றைக் கடந்தால் சாலை இரண்டாகப் பிரிகிறது.

இதில், ஒரு சாலை பாலமோருக்கும், மற்றொரு சாலை மாறாமலைக்கும் செல்கிறது. இந்த இரு பகுதிகளுக்கும் சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப் பாதையில் பயணிக்க வேண்டும். மாறாமலைக்குச் செல்லும்போது, பரந்துவிரிந்து காணப்படும் பெருஞ்சாணி அணையின் அழகைப் பார்த்து ரசிக்க முடியும். தென் திருவிதாங்கூர் மலைகள் என ஆங்கிலேயர்களால் பெயரிடப்பட்ட பாலமோர், மாறாமலைப் பகுதிகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. முதன்முதலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான்கிராண்ட் தலைமையில் இங்கு ஐரோப்பியர்கள் வந்து தங்கியதுடன் அவர்கள் தேயிலை, காபி போன்றவற்றையும் பயிரிட்டுள்ளனர். இப்போது மாறாமலை, பாலமோர் பகுதிகள் தனியார் தோட்டங்களாக உள்ளன. அவர்கள், ஆண்டில் சில நாள்கள் தங்களின் ஓய்வு இல்லங்களில் வந்து தங்கிச் செல்கின்றனர்.  

இங்குள்ள இரட்டைக்கான் அருவி, இலங்காபுரி அருவி, சீஃபீல்டு அருவி, குத்தரப்பாஞ்சான் அருவி ஆகியவையும், பனிபடர்ந்து நிற்கும் மலைமுகடுகளும், பச்சைபோர்த்திய நிலையில் காணப்படும் பள்ளத்தாக்குகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. மாறாமலையில்  சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுகிறது. ஆனால், அரசுக்குச் சொந்தமாக இடங்கள்தான் இல்லை.எல்லாம் தனியார் வசம்தான் உள்ளது என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement