லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனம் விற்றால் 3 மாதம் ஜெயில்!

‘நாளை முதல், ஒரிஜினல் லைசென்ஸை சுமந்துகொண்டே செல்ல வேண்டும்; இல்லையென்றால், ஸ்பாட் ஃபைன் 500 ரூபாய்’ என்கிற அதிரடியைத் தொடர்ந்து இன்னொரு அதிரடி வந்துள்ளது. இனிமேல், முறையான ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் கார்,பைக் வாங்க முடியும். 

licence

 

கார், பைக் வாங்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், டிரைவிங் லைசென்ஸ் இருக்காது. ‘வண்டி வாங்கிட்டு அப்புறமா லைசென்ஸ் வாங்கிக்கலாம்’ என்கிற ஐடியாவில் இருந்தால், இனி உங்கள் ஆசை எடுபடாது. ‘வாகனம் வாங்குபவர்களின் முறையான ஓட்டுநர் உரிமத்தை சோதனைசெய்த பிறகே, வாகனம் விற்க வேண்டும்’ என்று தமிழகப் போக்குவரத்துத்துறை, டீலர்களுக்கும் RTO அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு முன்பு லைசென்ஸ் இல்லாதவர்கள், LLR அப்ளை பண்ணியவர்கள் - அஃபிடவிட் அப்ளை செய்துவிட்டு வாகனம் புக் செய்து வந்தது, நடந்துவந்தது. ‘‘இனிமேல் அப்படி வாகனங்கள் விற்கக்கூடாது. வாகன ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுதல் திறன் இல்லாததுதான் அதிக விபத்துகளுக்குக் காரணமாகிறது. எனவே, இனி LLR வைத்திருப்பவர்களுக்கோ, சைசென்ஸ் இல்லாதவர்களுக்கோ வாகனம் விற்கக் கூடாது. மீறினால், டீலர்களுக்கு 3 மாத ஜெயில்’’ என்றும் அறிவித்திருக்கிறது போக்குவரத்துத்துறை. இது, மாற்றுத் திறனாளிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!