Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குர்மீத் சிங்கிற்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு Z+ பாதுகாப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆன்மிகவாதி குர்மீத் ராம் ரஹீமுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு இசட் ப்ளஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

குர்மித்

தேரா சச்சா சவுதா அமைப்பின்  தலைவர் குர்மீத் ராம் ரஹீம் தனது ஆசிரமப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை வழங்கியவர் நீதிபதி ஜக்தீப் சிங். அவர் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குர்மீத் ராமின் பாலியல் வன்கொடுமைகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்த பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைகளால் கலவரங்களும் நடந்திருக்கின்றன. 

அப்படிப்பட்ட குர்மீத் ராமுக்குத் தண்டனை வழங்கியதற்காக தண்டனை வழங்கிய நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு இசட் ப்ளஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement