தமிழகத்தில் காமராஜர் ஆட்சி தேவை! ஜி.கே வாசன் பேட்டி | TamilNadu needs kamarajar government right now, says GK Vasan

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (31/08/2017)

கடைசி தொடர்பு:16:10 (31/08/2017)

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி தேவை! ஜி.கே வாசன் பேட்டி

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ் கோட்டையில் கட்சித் தொண்டர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.

அதற்கு முன்பாக திருப்பத்தூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்..." தமிழக ஆளுநா் நடுநிலையோடும், ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தமிழ் மாநிலக் காங்கிரஸ் தயாராக உள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசியல் சூழல் காமராஜர் ஆட்சி தேவை என்ற உணா்வை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. பொது வாழ்வில் ஈடுபட்டவா்கள் குறித்து விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால், அவர்கள் சொல்வதையே உண்மை எனக் கருதிவிட முடியாது.

மீனவா்கள் பிரச்னை தொடர் கதையாகியுள்ளது. அதற்கு நிலையான நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் - சுஷ்மா ஸ்வாராஜின் இலங்கைப் பயணம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், கோட்பாட்டையும் எடுத்துச் சொல்லுவதாக இருக்க வேண்டும்” என பேசினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க