Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம் கேட்கும் கிராம மக்கள்!

சிவகங்கை அருகே திருவேலங்குடி கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளுரில் பள்ளிக்கூடமே இல்லாததால், பல கி.மீ., சரக்கு வாகனத்திலும், சைக்கிளிலும் பயணித்து படித்து வருகின்றனர். 10 ஆண்டுகளாக தங்கள் கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடம் துவங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

சிவகங்கை அருகே கௌரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேலங்குடி, காரம்பட்டி கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளுரில் பள்ளிக்கூடம் இல்லாததால் நாட்டரசன் கோட்டை ( 5 கி.மீ.,) காளையார்மங்களம் (7 கி.மீ.,) ஒக்கூா் (11 கி.மீ.,) போன்ற பகுதிகளில் படித்துவருகின்றனர்.

பள்ளி நேரத்துக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லாததால், சரக்கு வாகனங்களிலும், சைக்கிளிலும், ஆபத்தான பயணத்தில் படித்துவருகின்றனர். 20 மாணவர்கள் இருந்தாலே பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் 10 ஆண்டுகளாக கிராம மக்களின் கோரிக்கையை ஏற்க இந்த அரசு மறுக்கிறது.

சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததும், நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் உள்ளதாலும் மாணவ, மாணவிகள் நாள்தோறும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருவதால், சிறுகுழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு வீடு தேடி மாணவா்களைச் சேர்க்கும் அரசுப் பள்ளிகள், மாணவா்களே இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் என விதிமுறைகளைக் கடைபிடிக்கும் கல்வித்துறை 10 ஆண்டாக பள்ளிக்கூடம் கேட்கும் இந்த கிராம மக்களுக்கு நடுநிலைப்பள்ளியாவது அமைத்துத்தருமா இந்த அரசு என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement