ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை பற்றி கிரண்பேடி பதில்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மதுரை வந்தார். குற்றம் மற்றும் குற்ற தடுப்பு குறித்த கருத்தரங்கு மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடந்தது.

கிரண்பேடி
 

இதில், இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினாலஜியின் சென்னைத் தலைவர் திலகராஜ் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக கிரண்பேடி வருகை தந்து பேசினார், ‘குற்றம் நடந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் உடனே அதைக் காவல்துறையில் புகார் செய்ய வேண்டும். அங்கு நடவடிக்கை இல்லையென்றால், உயர் அதிகாரிகளுக்கு தபாலில் புகாரை அனுப்ப வேண்டும். எதையுமே செய்யாமல், அமைதியாக இருப்பது குற்றத்துக்குத் துணை போவதாகும். இதனால்தான் குற்றம் அதிகரிக்கிறது’’ என்றார். வழக்கம்போல் வந்திருந்த கூட்டத்தை தனது செல்போனில் படம் எடுத்தார்.

அப்போது, ‘’குழப்பமான தமிழக அரசியலைப் பற்றிக் கூறுங்கள்'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’நான் தமிழக அரசியலைப் பற்றி பேசக்கூடாது’’ என்றவரிடம், ‘’ஒரு ஆளுநர் என்ற முறையில் கருத்துச் சொல்லுங்கள்’’ என்றதற்கு, ‘’தமிழக ஆளுநர் மிகச் சிறந்தவர், அவர் சரியான முடிவை அறிவிப்பார்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!