'இதுவே என் வரம், இதுவே என் சாபம்' - காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பதிவு!

காயத்ரி ரகுராம்

'பிக் பாஸ்' பிரபலம்  காயத்ரி ரகுராம் சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில், 'இதுவே என் வரம், இதுவே என் சாபம்' என்று கூறும் ஒரு தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.


'நான் சென்சிட்டிவான ஒரு சோலாக இந்த மோசமான உலகத்தில் பிறந்துள்ளேன். பெரும்பாலானவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு காணப்படுகிறேன். இதுவே என் வரம், இதுவே என் சாபம்' என்கிற தத்துவம் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு அவரது ஃபாலோயர்கள் பலரும் எதிர்கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.   

காயத்ரி ரகுராம்


'பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழைந்தப் பிறகு சில வார்த்தைகளைப் பேசி சர்ச்சைக்குள்ளானார் காயத்ரி ரகுராம். ஒரு கட்டத்தில், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ட்விட்டரில் ஆக்டிவானார். ' நான் ஒன் மேன் ஆர்மி' என்பது மாதிரியான ஸ்டேட்டஸ்களைப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்துதான் சமீபத்தில், 'இதுவே என் வரம், இதுவே என் சாபம்' என்கிற தத்துவத்தையும் பதிந்துள்ளார். காயத்ரி 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய சிலநாள்களுக்குப் பிறகு, 'மீண்டும் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் வருவீர்களா என கேட்டதற்கு, 'விருப்பமில்லை' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!