’இனிமே இப்படி செய்தால் ஃபைன் போடுவேன்’ - அதிகாரிகளை எச்சரித்த கலெக்டர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி சார்பாக டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. 
 

கலெக்டர்

துப்புரவு பணியாளர்கள் மூலம் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அவர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவும் ஆட்சியர் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களுக்கும் அவர் சென்றார். அப்போது, அலுவலக ஜன்னல் பகுதியின் வெளியே பேப்பர் டீ கப்புகள் அதிக அளவு கிடந்தது. அதைத் தன் கையால் எடுத்து சுத்தம் செய்த ஆட்சியர், ’இங்கு பொதுமக்கள் குப்பைகள் போட வாய்ப்பில்லை. இங்கு வேலை செய்யும் அதிகாரிகள்தான் குப்பைகள் கீழே போட்டிருக்கமுடியும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டியது வரும்’ என எச்சரித்தார். அதன் தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார் . மேலும், பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தார். மாவட்ட ஆட்சியர், பணியாளர்களுடன் இணைந்து குப்பையை அகற்றிய காட்சியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தபடியே கடந்துசென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!