பள்ளிக்குள் மாணவச் சட்டமன்றம் அமைத்த ஆச்சர்யப் பள்ளி!

பள்ளி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி உள்ளது. மாணவர்களிடம் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருவது இப்பள்ளியின் தனிச்சிறப்பு. அந்த வரிசையில் சட்டமன்றத் தேர்தலைப் போலவே ஒரு தேர்தலைப் பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடத்தியுள்ளனர். முதலமைச்சர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமானவர்கள் போட்டியிட, சக மாணவர்கள் வாக்களித்தனர். அதில் அதிக வாக்குப் பெற்றவர்கள் வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தைத் தந்ததோடு உற்சாகத்தையும் தந்திருக்கிறது. 

பள்ளி

வெற்றி பெற்றவர்களுக்குப் பதவி ஏற்பு விழாவையும் நடத்தியிருக்கின்றனர். இந்த விழாவில் தேவகோட்டை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைவராக அஜய் பிரகாஷும், துணைத் தலைவராக காயத்ரியும், கல்வி அமைச்சராக கார்த்திகேயனும், வேளாண் துறை அமைச்சராக ராஜேஷும், மக்கள் தொடர்புத் துறை அமைச்சராக விக்னேஷும், உணவுத் துறை அமைச்சராக ராஜேஷும், சுகாதாரத் துறை அமைச்சராக சபரியும், பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜெனிபரும், அறிவியல் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நந்தகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். 

’இந்தச் செயல்பாடு மூலம் நம் சமூகம் பற்றிய நல்ல அறிமுகம் மாணவர்களுக்குக் கிடைப்பதுடன் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றும்போது தன்னம்பிக்கையும் பிறக்கிறது’ என்கிறார் இந்நிகழ்வை வழிநடத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!