ராஜிவ் பிரதாப் ரூடி ராஜினாமா, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்பு மேலும் சில அமைச்சர்கள் விலகுவர்

உமா பாரதி மற்றும் ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். 

பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை சீனா செல்லவுள்ளார். அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வசதியாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி மற்றும் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்களின் ராஜினாமா வரிசையில் நிர்மலா சீத்தாராமன், ராதா மோகன் சிங், மகேந்திர நாத் பாண்டே, சஞ்சீவ் பால்யான், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரையும் பதவி விலகும்படி மோடி சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, இவர்களும் செப்டம்பர் ஒன்றாம் தேதி பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியை அமித்ஷா சந்தித்துப் பேசவிருக்கிறார் என்று தெரிகிறது. மத்திய அரசின் புதிய அமைச்சரவையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் அ.தி.மு.க வுக்கும் தலா இரண்டு இடங்கள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!