புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

லைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதி, கடந்த ஜூலை மாதம் ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ஏ.கே.ஜோதி, தற்காலிகமாக தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில், முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் சுனில் அரோராவைப் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. பிரசார் பாரதியின் ஆலோசகராகவும் இவர் இருந்திருக்கிறார். சுனில் அரோரா பொறுப்பேற்கும் தினத்திலிருந்து அவரது பதவிக் காலம் தொடங்கும் என்று சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

சுனில் அரோரா

சுனில் அரோரா, ராஜஸ்தான் மாநில கேடரில் நியமிக்கப்பட்ட 1980-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர், ராஜஸ்தான் முதல்வரின் செயலாளராக இருந்திருக்கிறார். இந்தியன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இருந்தபோது, நிர்வாக இயக்குநராகத் திறம்படப் பணியாற்றியவர். இவர்மீது சர்ச்சைகளும் உண்டு. அதில் முதன்மையானது, நீரா ராடியா டேப்பில் இவரும் நீரா ராடியாவும் பேசுவது இடம் பெற்றிருந்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!