Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'50 ஆண்டுகளில் சிறந்த ஆகஸ்ட் மாதம்' - காரணம் சொல்லும் வெதர்மேன்!


தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம்தான் சிறந்த மழைப்பொழிவை பெற்றுள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மழை


தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. இந்த ஆண்டின், தென்மேற்குப் பருவமழையின் ஆரம்பத்திலும் சுமாரான மழைப்பொழிவே காணப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில், மாநிலம் முழுவதும் அதகளம் செய்துள்ளது மழை. அணைகளின் அளவு ஆங்காங்கே உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாத மழைப்பொழிவுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்துக்கு அதிக மழை கிடைத்த ஆகஸ்ட் மாதம் மற்றும் கடந்த 150 வருடங்களில் 8-வது அதிக மழையைப் பெற்ற ஆகஸ்ட் மாதம் இது. 1876-லிருந்து புள்ளிவிவரம் இருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக மழையைப் பெற்றது என்று கூறலாம்

மழை

கடந்த 200 ஆண்டுகளில், சென்னைக்கு 9-வது மழை மிகுந்த ஆகஸ்ட் மாதமும் இதுதான். சென்னையின் அதிகபட்ச மழை பெற்ற ஆகஸ்ட் மாதம் என்ற சாதனையை, 2011-ம் ஆண்டு முறியடித்தது. அதற்கு பிறகு 2011 ஆண்டைவிட அதிக மழைகொண்ட ஆகஸ்ட் மாதம் இதுவரை வரவில்லை" என்று கூறியுள்ளார்.

மழை

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement