வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (01/09/2017)

கடைசி தொடர்பு:10:03 (01/09/2017)

முதல்வரைச் சந்திக்கும் அற்புதம்மாள்!

பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அற்புதம்மாள் நன்றி தெரிவிக்க இருக்கிறார். 


ராஜீவ் கொலைக் குற்றத்திற்காக, கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவந்தார். அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. திருப்பத்தூர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துள்ள அவரைப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்துப் பேசிவருகின்றனர். இந்தநிலையில், பேரறிவாளனைப் பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அற்புதம்மாள் இன்று நன்றி தெரிவிக்க உள்ளார்.