வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (01/09/2017)

கடைசி தொடர்பு:11:49 (01/09/2017)

கோவை சிறையில் வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரம்!

வளர்மதி

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகப் போராடியற்காக கடந்த ஜூன் மாதம் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

"நெடுவாசல்,கதிராமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான  டெல்டா பகுதிகளை அழித்துவரும் நாசகரத் திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் கடலூர்,சிதம்பரம் மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை உடனே கைவிடக்கோரியும், சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டிவருவதைக் கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கிறார்.

இதற்குக் காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமான தகவல்களை அளித்துவரும் சிறைத்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்யக்கோரியும் உரிய விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையுமின்றி உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தும், சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவுக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வதைத் திட்டமிட்டே நிராகரித்து வருவதையும், வெளியே அனுப்பும் கடிதங்களைச் சென்றடையாமல் தடுத்து வருவதையும் கண்டித்து, வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.