Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவின் 1.5 லட்சம் கோடி சொத்து! - தி.மு.க முன்னாள் எம்.பி வெளியிட்ட 'பகீர்' தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமண நிகழ்வுக்காக வந்திருந்த தி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி ராமலிங்கம் நாகர்கோவிலில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசும் போது, "ஜெயலலிதாவின் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை 10 ஆண்டுகளுக்குள் பாதுகாக்காவிட்டால் தமிழகம் மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கும். தமிழகத்தில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குப் போகிறது. அதை விவசாய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம். தனியார் நிறுவனங்கள் விற்பனைக்கு எடுக்கும் தண்ணீர், கடலிலிருந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நிலையில், தமிழக அரசு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் உறுதியான ஆட்சியாக இல்லாமல் மத்திய அரசின் தயவால் ஆட்சி நடக்கிறது.  சட்டப்படி காரணங்களை கவர்னர் கூறுகிறார். ஆனால், நியாயப்படி பார்த்தால் இந்த அரசு நம்பிக்கையை இழந்துவிட்டது. தமிழக ஆட்சி விவகாரம் உட்கட்சி பிரச்னை என்றும், அதைச் சபாநாயகர்தான் முடிவு செய்ய வேண்டும் என கவர்னர் கூறுகிறார். இவர்கள் வலுவாக இருந்தால் நீட் தேர்வுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கும். ஆனால், இவர்கள் வலுவாக இல்லாததால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டனர்.  

மத்திய அரசின் ஆத்மா போன்ற திட்டங்களுக்குத் தமிழகத்தில் சரியான கண்காணிப்பு இல்லை. மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுபவர்களுக்கு ஏஜென்டுகளாக மாறிவிட்டனர். ஜெயலலிதாவின் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பணமாகவும்,நகையாகவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது எனது கற்பனை கணக்கு தான் இதை விட அதிகமாகவும் இருக்கலாம்.

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் நகைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கமிஷன் அமைத்து விசாரிக்கிறது.அதுபோல கமிஷனை ஜெயலலிதா சொத்து விசயத்தில் அமைக்க வேண்டும்.ஜெயலலிதாவுடன் தொடர்புடைய அனைவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை,வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும்.அப்போது கைப்பற்றப் படும் பணங்களை நீர் பாசன வசதிக்காக பயன் படுத்த வேண்டும்.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு வருடம் கவர்னர் ஆட்சி தமிழகத்தில் இருக்கும்.இப்போது ராஜினாமா செய்துள்ள மத்திய அமைச்சரில் ஒருவர் தமிழக கவர்னராக நியமிக்கப்படுவார்.அவரே தமிழத்தில் கவர்னர் அரசியல் செய்வார்.அதன் பிறகு தான் தேர்தல் வரும்' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement