Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமுருகன் காந்தி வழக்கு மேலும் இழுக்கிறது- செவ்வாய்க்கு விசாரணை தள்ளிவைப்பு!

திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருள்குமார் ஆகியோர் மீது குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அரசுத் தரப்பு பதில் மனுத் தாக்கல்செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், உரிய காலத்தில் பதில் தராமல் அரசுத் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டது. 

பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்த பின்னரும், மூன்று முறை அரசுத் தரப்பு வாய்தா வாங்கியதால் விசாரணை இழுத்துவருகிறது. பதில் மனுத் தாக்கல்செய்த பின்னர், இன்று கடைசியாக இவ்வழக்கில் இறுதி வாதம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இன்றைய வழக்குப் பட்டியலில் 24ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டிருந்ததால், நண்பகலுக்கு முன்னதாகவே விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், நீதிமன்ற அலுவல்கள் இன்று தொடங்கியவுடனேயே, புதிதாக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட விஜய நாராயணன், நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு முன்னர் முன்னிலையாகி, தானே இவ்வழக்கில் வாதாடப் போவதாகவும் அதற்கேற்ப அவகாசம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 
அதை ஏற்ற நீதிபதிகள், வரும் செவ்வாயன்று இவ்வழக்கின் அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement