Published:Updated:

யானை மார்க்கெட்டில் குவிந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள்... பதறிய ஆண்டிபட்டி மக்கள்!

யானை மார்க்கெட்
யானை மார்க்கெட்

144 தடை உத்தரவை காற்றில் பறக்கவிடும் செயலாக, ஆண்டிபட்டி அருகே மார்க்கெட் ஒன்றில், நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்ட்டது.

தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி அருகே உள்ளது யானை மார்க்கெட். ஏலம் முறையில், காய்கறி விற்பனை செய்யக்கூடிய இந்த மார்க்கெட்டிற்கு, ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தங்களது காய்கறி, பழங்களை இங்கே கொண்டுவந்து ஏலம் முறையில் விற்பனை செய்வது வழக்கம். யானை மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், குறைந்த விலையில், தரமான காய்கறி, பழங்களை வாங்கிச் சென்று, லாபம் வைத்து விற்பனை செய்வார்கள்.

`18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!' - தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’
மார்க்கெட்
மார்க்கெட்

இந்நிலையில், மார்க்கெட் இயங்க நேரக்கட்டுப்பாடு இன்றுமுதல் அமலுக்கு வந்த நிலையில், ஒரே நேரத்தில் நூற்றுகணக்கான வியாபாரிகள், காய்கறி, பழங்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். இதனைக் கண்ட ஆண்டிபட்டி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏன் இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் கூடுகின்றனர்? இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையா? என ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “மதியம் 2.30 மணி வரை தான் அனுமதி என்பதால், அனைவரும் வந்துவிட்டனர். மேலும், யானை மார்க்கெட்டில் இருந்து தான் மதுரைக்கு காய்கறிகள் செல்லும். அதனால், ஆண்டிபட்டியில் சீக்கிரம் வியாபாரத்தை முடித்தால், மதுரைக்கு காய்கறிகளை அனுப்பலாம். அதனால் தான் இச்சம்பவம் நடந்தது. இனி இது போன்று நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

`வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு
யானை மார்க்கெட்
யானை மார்க்கெட்

உழவர் சந்தைகள் அனைத்தும் மூன்று அடி இடைவெளியில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் சூழலில், யானை மார்கெட் மட்டும் அதில் விதிவிலக்காக செயல்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்த கட்டுரைக்கு