Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசல் ஓட்டுநர் உரிமம் 5-ம் தேதி வரை கட்டாயமில்லை - தமிழக அரசு

அசல் ஓட்டுநர் உரிமம் வரும் 5-ம் தேதி வரை கட்டாயப்படுத்தப்படாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. 

license
 

தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்துத் தெரிவித்தார். மேலும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி கூறினார். 

வாகனச் சட்ட பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்பதற்காக, வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்திருந்தது உயர் நீதிமன்றம். பிற்பகல் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. பின்னர் ’வரும் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம்  கட்டாயப்படுத்தப்படாது’ என்றும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement